சாராயம் விற்ற பெண்கள் உள்பட 7 பேர் கைது

கீழ்வேளூர் அருகே சாராயம் விற்ற பெண்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-01-01 18:45 GMT

சிக்கல்:

கீழ்வேளூர் அருகே சாராயம் விற்ற பெண்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரோந்து பணி

புதுச்சேரி மாநிலத்தில் இருந்து நாகை மாவட்டத்துக்கு சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் போலீசார் ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கீழ்வேளூர் அருகே நீலப்பாடி, சிக்கல், ஓர்குடி வடகரை, ஆகிய பகுதியில் கீழ்வேளூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது நீலப்பாடி மெயின் ரோட்டில் சாராயம் விற்ற நீலப்பாடி கொள்ளுபட்டறை தெருவை சேர்ந்த சிற்றரசு (வயது58), சிக்கல் பனைமேடு மெயின் ரோட்டில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித்(35), சிக்கல் கோட்டேரி தெருவில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் தினகரன் (22), ராதாமங்கலம் எறும்புகன்னி மெயின் ரோட்டில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த மொட்ட முருகன் (49) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

7 பேர் கைது

இதேபோல் ஒர்குடி பாலம் அருகில் சாராயம் விற்ற ஒர்குடி கீழத்தெருவை சேர்ந்த செல்வராஜ் மனைவி கலா (55), ஒர்குடி கீழத்தெருவில் சாராயம் விற்ற அதேபகுதியை சேர்ந்த கார்த்தி மனைவி கண்ணம்மாள் (30), வங்காரமாவடி மாதா கோவில் அருகே சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த கலியபெருமாள் (45) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 7 பேரிடம் இருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்

Tags:    

மேலும் செய்திகள்