ஆயுதங்களுடன் 7 பேர் கைது

ஆயுதங்களுடன் 7 பேர் கைது

Update: 2022-09-05 20:05 GMT

மதுரை ஆனையூர் பகுதியை சேர்ந்த ஒரு மாணவர் தல்லாகுளம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவருக்கும் அவருடன் படிக்கும் மாணவர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று ஆனையூர் மாணவரும், அவரது நண்பரும் கல்லூரி வளாகத்தில் இருக்கும் போது எதிர்தரப்பை சேர்ந்த 7 மாணவர்கள் கையில் கத்தியுடன் அவர்களை வழிமறித்தனர்.

பின்னர் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு அவர்களை தாக்கி விட்டு தப்பி விட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் தல்லாகுளம் உதவி கமிஷனர் சுரேஷ்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகநாதன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர் அவர்கள் 7 பேரையும் தேடி வந்தனர். பின்னர் நள்ளிரவில் அவர்கள் தங்கியிருந்த இடத்தை சுற்றி வளைத்து 7 பேரையும் பிடித்தனர். அதில் 6 பேர் சிறுவர்கள் என்பதால் அவர்களை கைது செய்து சிறுவர் சீர்த்திருத்த பள்ளியிலும், ஒருவரை சிறையிலும் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்