கஞ்சா விற்ற 7 பேர் கைது

நெல்லையில் கஞ்சா விற்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-11-29 21:29 GMT

நெல்லை மேலப்பாளையம் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பள்ளிக்கூடம் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்த வாலிபர்கள் சிலரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த அப்துல்கரீம் (வயது 23), கலுதீன் பாதுஷா (23), இப்ராம் பாதுஷா (27), மேலப்பாளையம் ஆமீம்புரத்தை சேர்ந்த சதாம் உசேன் (22), குறிச்சியை சேர்ந்த செல்வம் என்ற மில்டிரி (24) ஆகியோர் என்பதும், கஞ்சா வைத்து இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், 25 கஞ்சா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல் மேலப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் அருகே, கஞ்சா பொட்டலங்களை வைத்துக் கொண்டு நின்றதாக வீரமாணிக்கபுரத்தை சேர்ந்த ரமேஷ் (வயது 39) என்பவரை பிடித்து போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 75 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். நெல்லை பொதிகை நகர் பகுதியில், கஞ்சா வைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்ததாக ரெட்டியார்பட்டியை சேர்ந்த டேனியல் மகன் பெனடிக் (வயது 23) என்பவரை பெருமாள்புரம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 60 கிராம் கஞ்சா, ரூ.18 ஆயிரம் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்