கஞ்சா விற்ற 7 பேர் கைது

கஞ்சா விற்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-08-06 21:20 GMT


மதுரை தெப்பக்குளம், ஜெய்ஹிந்த்புரம், அவனியாபுரம், திடீர்நகர், கரிமேடு உள்ளிட்ட போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட இடங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதிகளில் கஞ்சா விற்று கொண்டிருந்த சக்திவேல் (வயது 54), நாகராஜன் (41), தினேஷ்குமார், கண்ணன், பிரபு, அழகர், கோபிகிருஷ்ணன் ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 350 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்