டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 7 பேர் அனுமதி

டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 7 பேர் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2022-11-23 11:57 GMT

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள தீவிர காய்ச்சல் பிரிவில் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டத்தை சேர்ந்த 7 பேர் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் காய்ச்சல் சிகிச்சை வார்டில் 20-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

வேலூர் மாவட்டத்தில் டெங்கு கொசுவை கட்டுப்படுத்த வீடு வீடாக கொசு ஒழிப்பு பணிகள் நடந்து வருகிறது. மேலும் பல்வேறு இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்புகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டும். காய்ச்சல் தொடர்ந்து இருந்தால் ரத்த மாதிரி பரிசோதனை செய்து டெங்கு அறிகுறி உள்ளதா என்பதை கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். பொது மக்கள் தங்களது வீடுகளில் பழைய பிளாஸ்டிக், டயர், தேங்காய் மட்டை போன்றவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்