இலங்கையில் இருந்து மேலும் 7 பேர் அகதிகளாக தமிழகம் வருகை
இலங்கையில் இருந்து மேலும் 7 பேர் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர்
ராமேசுவரம்,
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அங்கு மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமலும் குழந்தைகளுடன் பசி பட்டினியுடன் தவித்து வருகின்றனர். அதுபோல் இலங்கையிலிருந்து இதுவரையிலும் தமிழகத்திற்கு 104 பேர் அகதிகளாக வந்துள்ளனர்.
இந்த நிலையில் வவுனியா பகுதியில் இருந்து இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் உள்ளிட்ட ஏழு பேர் அகதிகளாக இன்று தனுஷ்கோடி அரிச்சல்முனை அருகே நடுக்கடலில் உள்ள 1-வது மணல் திட்டுப் பகுதியில் இறக்கிவிடப்பட்டு தவித்துள்ளனர்.
அப்போது அங்கு ரோந்து சென்ற இந்திய கடலோர காவல் படையினர் அவர்களை கப்பலில் ஏற்றி தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரைக்கு அழைத்து வந்து கடலோர போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். கடலோர போலீசார் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.