திருச்சி விமான நிலையத்தில் ரூ.7¾ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் ரூ.7¾ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், துபாய், மலேசியா, இலங்கை உள்பட பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து ஏர் ஏசியா விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர். இந்த நிலையில் மதுரையை சேர்ந்த பரமேஸ்வரி (வயது 36) என்ற பெண் பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து அதிகாரிகள் அவரிடம் நடத்திய சோதனையில் உடலில் மறைத்து ரூ.7.74 லட்சம் மதிப்பிலான 143 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் இருந்த தங்கத்தை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.