உயிரிழந்த சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்தினருக்கு ரூ.7¼ லட்சம் நிதியுதவி
உயிரிழந்த சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்துக்கு ரூ.7¼ லட்சம் நிதியுதவியை செய்யாறு துணை போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சரக போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட அனக்காவூர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த விஜயகுமார் (வயது 51) கடந்த ஜூலை மாதம் பணியில் இருந்த உயிரிழந்தார்.
இந்தநிலையில் தமிழக காவல்துறையில் பணியாற்றி வரும் 1993 பிரிவு (பேட்ஜ்) காவலர்கள் சார்பில் காக்கும் கரங்கள் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் சார்பில் உறுப்பினர்களிடம் மாதந்தோறும் சந்தா தொகை ரூ.500 வசூலிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து உயிரிழந்த சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. செய்யாறு சரக துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் தலைமையில் விஜயகுமாரின் மனைவி ஸ்ரீதேவியிடம் ரூ.7 லட்சத்து 32 ஆயிரத்து 700 ரொக்கமாக வழங்கினார்.
இதில் செய்யாறு இன்ஸ்பெக்டர் பாலு, சப்-இன்ஸ்பெக்டர் சங்கர், சிறப்பு உதவி ஆய்வாளர் அமுல்தாஸ் (தனி பிரிவு) மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்.