அரசு பள்ளி மாணவிகள் 7 பேர் மாநில அளவில் முதலிடம்
கலைத்திருவிழா போட்டியில் அரசு பள்ளி மாணவிகள் 7 பேர் மாநில அளவில் முதலிடம் பிடித்தனர்.;
பாவூர்சத்திரம்:
தமிழக அரசால் நடத்தப்படும், அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கான கலைத்திருவிழா போட்டிகள், மாநில அளவில் மதுரையில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் வட்டாரம் வெள்ளகால் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள் அனுசுயாபேபி, நந்தனா, ஜனனி, சந்திகா, அனுஷாசெல்வி, வர்ஷா, லலிதா ஆகியோர் கிராமிய நடனம் போட்டியில் கலந்து கொண்டனர். இவர்கள் 7 பேரும் மாநில அளவில் முதலிடம் பெற்று, சென்னையில் தமிழக முதல்-அமைச்சரால் வழங்கப்படும் "கலையரசி" பட்டம், பரிசும் பெற தகுதி உள்ளவராக தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் காமராஜ் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் பாராட்டினர்.