அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மீதான 7 வழக்குகள் ரத்து - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மீதான 7 வழக்குகளை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மீதான 7 வழக்குகளை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
அதிமுக ஆட்சி காலத்தில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜல்லிக்கட்டு, விவசாயகளுக்கு ஆதரவாகவும், நீட் தேர்வுக்கு எதிராக போராடியதற்காக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை ரத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.