ஊருணியின் அருகில் இருந்த 7 கட்டிடங்கள் இடித்து அகற்றம்

ஊருணியின்அருகில் இருந்த 7 கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன.

Update: 2023-04-19 19:25 GMT

சிவகாசி, 

ஊருணியின்அருகில் இருந்த 7 கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன.

ஆக்கிரமிப்பு

சிவகாசி பஸ் நிலையத்தின் எதிரில் உள்ள பொத்துமரத்து ஊருணியின் அருகில் இருந்த காலி இடத்தில் தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து கட்டிங்களை கட்டி இருந்தனர். இந்த நிலையில் தற்போது பொத்துமரத்து ஊருணி தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் ஊருணியின் அருகில் நீர்வரத்து பாதையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்களை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி நேற்று காலை 11 மணிக்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற தேவையான மணல் அள்ளும் எந்திரத்துடன் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

கட்டிடங்கள் அகற்றம்

பின்னர் அங்கு இருந்த 7 கட்டிடங்களை மணல் அள்ளும் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர். இந்த பணி 5 மணி நேரம் நீடித்தது.

இடித்து அகற்றப்பட்ட கட்டிட இடிபாடுகளை அங்கிருந்து அகற்றும் பணி இன்று நடைபெறும் என்று கூறப்படுகிறது. பொத்துமரத்து ஊருணி தூர்வாரும் பணி முடிந்த பின்னர் ஊருணியை சுற்றி உள்ள பகுதியில் நடைபயிற்சி தளம் மற்றும் பூங்காவை அமைக்க அரசு ரூ.1 கோடியே 70 லட்சம் நிதி ஒதுக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்