பதக்கங்கள் வென்ற பழங்குடியின மாணவ-மாணவிகள்: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பதக்கங்கள் வென்ற பழங்குடியின மாணவ-மாணவிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

Update: 2023-01-04 11:47 GMT

சென்னை,

ஆந்திர மாநிலம், குண்டூர் மற்றும் விஜயவாடாவில் 17.12.2022 முதல் 22.12.2022 வரை நடைபெற்ற 3-வது தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் 22 மாநிலங்களைச் சேர்ந்த 4000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 177 பழங்குடியின மாணவ, மாணவியர்கள் பங்கு பெற்றனர். போட்டிகளில் இதுவரை காணாத வகையில் 10 தங்கம், 27 வெள்ளி மற்றும் 30 வெண்கலம் என மொத்தம் 67 பதக்கங்களை வென்று தமிழ்நாடு 5-வது இடத்தை பெற்று சாதனை படைத்தது. பதக்கங்கள் வென்ற பழங்குடியின மாணவ-மாணவிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்