பொதுமக்களிடம் இருந்து 65 மனுக்கள் பெறப்பட்டன
ஊட்டியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 65 மனுக்கள் பெறப்பட்டன.
ஊட்டி
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக கொடுத்தனர். கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 65 மனுக்களை கலெக்டர் பெற்றுக்கொண்டார். அந்த மனுக்களை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் லோகநாதன், உதவி ஆணையாளர் கண்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.