கடையநல்லூரில் நடந்த ஜமாபந்தியில் 63 மனுக்களுக்கு தீர்வு

கடையநல்லூரில் நடந்த ஜமாபந்தியில் 63 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

Update: 2023-05-26 18:45 GMT

கடையநல்லூர்:

கடையநல்லூர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி கடந்த 24-ந்தேதி தொடங்கி நேற்று வரை நடந்தது. கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், 'இந்த ஜமாபந்தியில் மொத்தம் 263 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அதில் 63 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன. பட்டா, உதவித்தொகை கேட்டு வந்துள்ள மீதமுள்ள மனுக்களுக்கும் தீர்வு காணப்படும். 27 பயனாளிகளுக்கு கணினிவழி இ-பட்டா, 25 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா உள்பட மொத்தம் 63 பயனாளிகளுக்கு ரூ.44 லட்சத்து 67 ஆயிரத்து 820 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன' என்றார்.

நிகழ்ச்சியில், நில அளவை துறை உதவி இயக்குனர் பேச்சியப்பன், தாசில்தார் சண்முகம், அலுவலக மேலாளர் அழகப்பராஜா, சமூக பாதுகாப்புத்திட்ட தாசில்தார் திருநாவுக்கரசு, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன், நத்தம் நிலவரி திட்ட தாசில்தார்கள் பாலசுப்பிரமணியன், ராமலிங்கம், ஆதிதிராவிடர் நல தனித்தாசில்தார் கண்ணன், தலைமையிடத்து துணை தாசில்தார் ராஜாமணி, துணை தாசில்தார் சுடலை, தலைமை சர்வேயர் சாகுல்ஹமீது, வருவாய் ஆய்வாளர்கள் காசிலட்சுமி, புளியங்குடி சேகர், ஆய்க்குடி சங்கரேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்