ராஹத் பஸ் நிறுவனம் ரூ.381 கோடி மோசடி செய்ததாக 6,131 பேர் புகார்

ராஹத் பஸ் நிறுவனம் ரூ.381 கோடி மோசடி செய்ததாக 6,131 பேர் புகார்

Update: 2022-10-22 20:25 GMT

ராஹத் பஸ் நிறுவனம் ரூ.381 கோடி மோசடி செய்ததாக இதுவரை 6,131 பேர் புகார் அளித்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.

ராஹத் பஸ் நிறுவனம்

தஞ்சை மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு லில்லி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சையை சேர்ந்த ராஹத் பஸ் நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள், பஸ் நிறுவனத்தை நடத்தி வந்த கமாலுதீன், தங்களிடம் பணம் பெற்றுக் கொண்டு லாபம் கொடுப்பதாக கூறி தங்களை ஏமாற்றி விட்டதாக தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு திருச்சி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றம் செய்யப்பட்டு, முதலீட்டாளர்களிடமிருந்து புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

புகார் அளிக்கலாம்

இந்த பஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்தவர்கள், இதுவரை புகார் அளிக்காதவர்கள், உடனடியாக திருச்சி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம், பல்துறை கட்டிட வளாகம், முதல்தளம், மன்னார்புரம் திருச்சி என்ற முகவரியில் தங்களது புகாரை பதிவு செய்யலாம், மேலும் விவரங்களுக்கு 0431-2422220 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

6,131 பேர் புகார்

ராஹத் பஸ் நிறுவனம் மோசடி செய்ததாக 6,131 பேர் புகார் மனுவை அளித்துள்ளனர். அதில் ரூ.387 கோடி மோசடி செய்ததாக புகார் வந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்