61 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

61 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

Update: 2022-10-01 12:02 GMT

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை, துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், திருப்பூர் மாநகராட்சி, அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 61 பணியிடங்களை மாவட்ட நலச்சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

இதற்காக வருகிற 14-ந் தேதி திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேர்காணல் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. எனவே தகுதியான நபர்கள் இந்த நேர்காணலில் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு https://tiruppur.nic.in/notice-category/recruitment/என்ற வலைதள முகவரியில் காணலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 0421 2478500 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

----

Tags:    

மேலும் செய்திகள்