கடந்த மாதத்தில் மட்டும் மெட்ரோ ரெயிலில் 61½ லட்சம் பேர் பயணம் - அதிகாரிகள் தகவல்

சென்னை மெட்ரோ ரெயிலில் கடந்த மாதத்தில் மட்டும் மெட்ரோ ரெயிலில் 61½ லட்சம் பேர் பயணித்துள்ளனர் என்று மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Update: 2022-11-02 07:15 GMT

சென்னை மெட்ரோ ரெயிலில் கடந்த அக்டோபர் மாதத்தில் மொத்தம் 61 லட்சத்து 56 ஆயிரத்து 360 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதில் அதிகபட்சமாக கடந்த 21-ந்தேதி 2 லட்சத்து 65 ஆயிரத்து 683 பயணிகள் பயணித்துள்ளனர்.

இதேபோல் செல்போன் மூலம் பெறப்படும் 'க்யூ-ஆர்' கோடு முறையை பயன்படுத்தி 18 லட்சத்து 57 ஆயிரத்து 688 பயணிகள் பயணித்துள்ளனர். மேலும் பயண அட்டையை பயன்படுத்தி 36 லட்சத்து 33 ஆயிரத்து 56 பயணிகள் பயணம் செய்துள்ளனர். சென்னை மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்பவர்களில் 'க்யூ-ஆர்' கோடு பயணச்சீட்டு மற்றும் பயண அட்டைகளை பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 20 சதவீதம் கட்டண தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இவ்வாறு மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்