புதுக்கோட்டையில் 600 மதுபாட்டில்கள் பறிமுதல்; 4 பேர் கைது
புதுக்கோட்டையில் 600 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மிலாது நபி பண்டிகையையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தன. இந்த நிலையில் புதுக்கோட்டை டவுனில் சாந்தநாதபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் முன்பு மதுவிற்பனையில் சிலர் ஈடுபட்டனர். அவர்கள் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றனர். போலீசார் ரோந்து சென்ற பின்னும் மதுவிற்பனை களை கட்டியது. இதற்கிடையில் மது விற்பனையில் ஈடுபட்ட மற்றும் மதுபானங்களை காரில் விற்பனைக்காக கடத்தி சென்றவர்கள் உள்பட 4 பேரை தனிப்படையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 600 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.