மதுவிற்ற 60 பேர் கைது

திருவாரூர் மாவட்டத்தில் மிலாது நபி விடுமுறை நாளில் மதுவிற்ற 60 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1,500 மது பாட்டில்கள் மற்றும் 120 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2023-09-29 18:45 GMT

திருவாரூர் மாவட்டத்தில் மிலாது நபி விடுமுறை நாளில் மதுவிற்ற 60 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1,500 மது பாட்டில்கள் மற்றும் 120 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டன.

கலெக்டர் எச்சரிக்கை

திருவாரூர் மாவட்டம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. தமிழகம் முழுவதும் நேற்று மிலாது நபியையொட்டி அரசு மது கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனை மீறி மது விற்பனை செய்யப்படுவது தெரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

தீவிர தேடுதல் வேட்டை

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான கடைகள் நேற்று இயங்கவில்லை. இதன் காரணமாக கள்ளச்சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகின்றதா? என்பது குறித்து திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவின்படி திருவாரூர் மாவட்டம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

60 பேர் கைது

திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நன்னிலம், வலங்கைமான், நீடாமங்கலம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கள்ளச்சந்தையில் மது, வெளி மாநில சாராயம், மது பாட்டில்களை விற்ற 60 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 1,500 மது பாட்டில்கள் மற்றும் 120 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்