சரக்கு லாரிகள் உள்பட 6 வாகனங்கள் பறிமுதல்

திண்டுக்கல்லில் சாலை வரி செலுத்தாத சரக்கு லாரிகள் உள்பட 6 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-04-13 19:00 GMT

திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் சுரேஷ், மோட்டார் வாகன ஆய்வாளர் இளங்கோ ஆகியோர் திண்டுக்கல்-கரூர் சாலையில் நந்தவனபட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சரக்கு ஏற்றி வந்த 3 லாரிகளை மடக்கி சோதனை செய்தனர். அதில் 3 லாரிகளுக்கும் சாலை வரி செலுத்தாமல், தகுதி சான்று புதுப்பிக்காமல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 3 லாரிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் திண்டுக்கல் நகரில் பழனி சாலை, திருச்சி சாலை ஆகிய பகுதிகளிலும் வாகன சோதனை நடத்தினர். அப்போது சாலை வரி செலுத்தாமல், தகுதி சான்று மற்றும் பெர்மிட் இல்லாமல் இயக்கப்பட்ட தனியார் கல்லூரி பஸ்சை கண்டுபிடித்தனர். இதுதவிர 12 மாணவிகளை ஏற்றி சென்ற ஆட்டோ, அதிக அளவில் ஆட்களை ஏற்றி சென்ற ஆட்டோ ஆகியவையும் சிக்கின. எனவே அந்த கல்லூரி பஸ், 2 ஆட்டோக்களையும் பறிமுதல் செய்தனர்.

இதைத்தொடர்ந்து அந்த 6 வாகனங்களுக்கும் ரூ.2 லட்சம் அபராதம் விதித்தனர். இதேபோல் திண்டுக்கல் முழுவதும் தினசரி வாகன சோதனை நடத்த போவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்