மில்லில் பதுக்கி வைத்திருந்த 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 3 பேர் கைது

மில்லில் பதுக்கி வைத்திருந்த 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்து 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-06-24 20:35 GMT


மதுரை குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன் தலைமையில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா மற்றும் போலீசார் வண்டியூர் பகுதியில் அரிசி ஆலைகளில் திடீர் சோதனை செய்தனர். அப்போது ஒரு ஆலையில் 6,200 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு ரேஷன்அரிசியை பதுக்கி வைத்திருந்த மதுரையை சேர்ந்த செல்வம், கணேசன், சேதுபாண்டி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து, அதற்கு பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் அந்த அரிசி ஆலை கட்டிடத்தின் உரிமையாளர் செந்தில்குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரையும் தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்