நள்ளிரவில் வீடு புகுந்து 6 பவுன் நகை திருட்டு

ஜோலார்பேட்டை அருகே மர்ம நபர்கள் நள்ளிரவில் வீடு புகுந்து 6 பவுன் நகைகளை திருடிச்சென்றனர்.

Update: 2023-08-30 18:21 GMT

ஜோலார்பேட்டை அருகே பாச்சல் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட ஹயாத் நகர் பகுதியை சேர்ந்தவர் சாம்ராஜ். இவரது மனைவி வசந்தா (வயது 60). சம்பவத்தன்று நள்ளிரவில் குடும்பத்துடன் துாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் பீரோவில் இருந்த 6 பவுன் நகையை திருடி சென்று விட்டனர்.

மறுநாள் காலை வசந்தா எழுந்து பார்த்த போது கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவை திறந்து பார்ததபோது, பொருட்கள் சிதறி கிடந்தன அத்துடன் பீரோவில் வைத்திருந்த 6 பவுன் தங்க நகை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது குறித்து ஜோலார்பேட்டை போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் ஜோலார்பேட்டை போலீசார் திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்