ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 6 பேர் கைது
ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்
மதுரை அண்ணாநகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் பாண்டிகோவில் ரிங் ரோடு அம்மா திடல் அருகே சென்ற போது அங்கு ஒரு கும்பல் பதுங்கி இருப்பதை கண்டனர். உடனே போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அதில் கரும்பாலை நடுத்தெரு கார்த்திக் (வயது 27), திருப்பதி (25), விக்னேஷ் (26), கனிஷ்கர் (26), சரவணன் (26), திருப்பாலை ரெட்ரோஸ் தெருவை சேர்ந்த அஜித் குமார் (33) என்பது தெரியவந்தது. மேலும் அவர்களை சோதனை செய்த போது 2 கத்திகள், கயிறு, மிளகாய்பொடி பாக்கெட்டுகள் உள்ளிட்டவை இருந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 6 பேரையும் கைது செய்தனர்.