சுவரொட்டி கிழித்த பிரச்சினையில் 6 பேர் கைது
நெல்லை அருகே சுவரொட்டி கிழித்த பிரச்சினையில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.;
நெல்லை அருகே உள்ள வெள்ளாளங்குளம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராமையா என்பவரின் மகன் கண்ணன் (வயது 20). இவர் அந்த பகுதியில் ஒட்டப்பட்ட சுவரொட்டி கிழிக்கப்பட்டது தொடர்பாக நேற்று முன்தினம் தனது நண்பர்கள் 5 பேருடன் சீதபற்பநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க சென்றார்.
அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (20), சுடலை (29), ராமசாமி (35), வேல்மாரி (30), சுப்பிரமணியன் (32), பிச்சுமணி (35) மற்றும் 10 பேர் சேர்ந்து போலீஸ் நிலையத்தின் காம்பவுண்டு சுவர் அருகே வைத்து அவர்களை புகார் கொடுக்க விடாமல் தடுத்து தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கண்ணன் கொடுத்து புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பாலசுப்பிரமணியன், சுடலை, ராமசாமி, வேல்மாரி, சுப்பிரமணியன், பிச்சுமணி ஆகிய 6 பேரை நேற்று கைது செய்தார்.