மது விற்ற 6 பேர் கைது

நெல்லையில் மது விற்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-01-01 19:05 GMT

நெல்லை மாநகர பகுதியில் நேற்று முன்தினம் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்றதாக நெல்லை டவுன் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சண்முகசுந்தரம் (வயது 43), பேட்டை சாஸ்திரி நகரை சேர்ந்த முருகன் (41), சீவலப்பேரியை சேர்ந்த மாடசாமி (23), சங்கர் நகரை சேர்ந்த அங்கப்பன் (29), வண்ணார்பேட்டை பகுதியை சேர்ந்த குலசேகரன் (38), கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த முருகன் (57) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 264 மது பாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்