ஆனைமலை
ஆனைமலை பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆனைமலை போலீசார் ஒடையகுளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பணம் வைத்து சூதாடிய ஆனைமலை, வேட்டைக்காரன் புதூர், ஒடைய குளம் பகுதிகளை சேர்ந்த திருமலைசாமி(வயது 59), கார்த்திகை வேல்(41), பழனிச்சாமி(49), பாலசுப்ரமணியம்(48), பார்த்தசாரதி(34), மாரியப்பன்(52) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3 ஆயிரத்து 600 பறிமுதல் செய்யப்பட்டது.