பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது செய்தனர்.

Update: 2023-02-06 18:39 GMT

இலுப்பூர் அருகே சாங்கிராப்பட்டி பகுதிகளில் பொது இடத்தில் பணம் வைத்து சூதாட்டம் விளையாடுவதாக இலுப்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமலதா உள்ளிட்ட போலீசார் சாங்கிராப்பட்டி, வீரச்சிக்குளம் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதியில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த சாங்கிராப்பட்டி பகுதியை சேர்ந்த வீரையா (வயது 52), நாகராஜ் (30), பால்ராஜ் (31), அஜீத்குமார் (32), வேலுச்சாமி (38), பாண்டி (36) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.650-ஐ பறிமுதல் செய்தனர். பின்னர் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்