பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது
பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
குளித்தலை அருகே உள்ள கீழதாளியாம்பட்டி மாரியம்மன் கோவில் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் அப்பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட கீழதாளியாம்பட்டி பகுதியை சேர்ந்த முருகவேல் (வயது 34), சுந்தரவடிவேல் (45), சக்திவேல் (27), ராஜேந்திரன் (37), முத்துசாமி (37), ரெங்கநாதன் (32) ஆகிய 6 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த சீட்டுக்கட்டுகள் மற்றும் ரூ.280 பறிமுதல் செய்யப்பட்டன.