பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது
திட்டக்குடி அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது செய்யப்பட்டனா்.
ராமநத்தம்;
திட்டக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையிலான போலீசார் ரோந்துப்பணி மேற்கொண்டனர். அப்போது பெருமுளை மாரியம்மன் கோவில் அருகில் பணம் வைத்து சூதாடியதாக அதே ஊரை சேர்ந்த முருகேசன் மகன் ராயதுரை(வயது 37), முருகேசன் மகன் கண்ணன்(36), மணியார் மகன் ரவி(45), பூபதி(50), கருப்பையன் மகன் அண்ணாதுரை(50), மருது மகன் காசிமணி(40) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.