பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது
பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள பாப்பாக்குடி கடைவீதியில் சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் மீன்சுருட்டி இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது போலீசாரை கண்டதும் அவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இருப்பினும் 6 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் சொக்கலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த அருள் (வயது 52), காடுவெட்டி தெற்கு தெருவை சேர்ந்த வீரப்பன் (49), நரசிங்க பாளையம் கிராமத்தை சேர்ந்த பாலகுரு (40), கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள நந்திசோழமங்களம் கிராமத்தை சேர்ந்த குமார் (48), குடிகாடு கிராமத்தை சேர்ந்த உமாபதி (46), ஒடப்பேரி கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து (54) என்பது தெரியவந்தது. பின்னர் அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் ரூ.32 ஆயிரத்து 590 பறிமுதல் செய்யப்பட்டது.