போலீசார் மீது கல் வீசியவர்கள் உள்பட 6 பேர் கைது

கனியாமூர் கலவர வழக்கு போலீசார் மீது கல் வீசியவர்கள் உள்பட 6 பேர் கைது

Update: 2022-09-14 17:07 GMT

கள்ளக்குறிச்சி

சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கலவரம் குறித்து சிறப்பு புலனாய்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து வருகின்றனர்.

இ்ந்த நிலையில் கலவரம் தொடர்பான வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் பள்ளி சொத்துகளை சேதப்படுத்திய சங்கராபுரம் தாலுகா சோழம்பட்டு கிராமத்தை சேர்ந்த பெரியசாமி மகன் மணிகண்டன்(வயது 22), கச்சிராயப்பாளையம் குளத்துமேட்டுத்தெருவை சேர்ந்த கிருஷ்ணகுமார் மகன் ரமேஷ்(வயது 22), போலீசார் மீது கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்ட வடக்கனந்தல் எம்.ஜி.ஆர். நகர் கொளஞ்சி மகன் மணிகண்டன்(24), பங்காரம் கிராமம் பாவாடை(46), தெங்கியாநத்தம் கிராமம் ராஜீவ்காந்தி(41), செம்படாக்குறிச்சி கிராமம் நாகராஜன் மகன் ரகுபதிராஜன்(24) ஆகிய 4 பேரை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்