ஜல்லிக்கட்டு போராட்ட வழக்கில் 6 பேர் விடுதலை-புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு
ஜல்லிக்கட்டு போராட்ட வழக்கில் 6 பேர் விடுதலை செய்து புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.;
தமிழகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரி பல்வேறு இடங்களில் தன்னெழுச்சியாக போராட்டம் நடந்தது. புதுக்கோட்டை திலகர் திடலில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தியதாக மணிகண்டன், நியாஸ், சுதாகர், ஆறுமுகம், பிரபாகரன் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு புதுக்கோட்டை ஜூடிசியல் மாஜிஸ்திரேடு கோர்ட்டு எண் 1-ல் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு ஜெயந்தி நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் 6 பேரையும் விடுதலை செய்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.