கோட்டூரில் பனை மரங்களை வெட்டி கடத்த முயன்ற 6 பேர் கைது
கோட்டூரில் பனை மரங்களை வெட்டி கடத்த முயன்ற 6 பேர் கைது
கோட்டூர்
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை, ஆழியார் நகர் சேர்ந்த மகேஷ் (வயது 47). இவரது தங்கை லீலாவதிக்கு சொந்தமான தோட்டம் கோட்டூரில் உள்ளது. அங்கு தோட்டத்தில் உள்ள 7 பனை மரங்களை சிலர் வெட்டி கடத்துவதாக மகேசுக்கு தகவல் கிடைத்தது.இதனையடுத்து மகேஷ் கோட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதனையடுத்து கோட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது தோட்டத்தில் பனை மரத்தை வெட்டிக் கொண்டிருந்த கோட்டூர், மலையாண்டி பட்டினத்தைச் சேர்ந்த மகாலிங்கம் (62), கம்பாளபட்டியைச் சேர்ந்த சபாபதி (32), பில்சின்னம்பாளையத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (37), மஞ்ச நாயக்கனூரைச் சேர்ந்த கண்ணன் (42), சுகுணா பிரகாஷ் (21) முருகவேல் (28) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.