சூதாடியதாக 6 பேர் கைது

Update: 2022-11-23 19:00 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள குள்ளக்காபாளையத்தில் உள்ள ஒரு தனியார் இடத்தில் பணம் வைத்து சூதாடுவதாக தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும் அந்த கும்பல் தப்பி ஓட முயற்சி செய்தது. இதையடுத்து போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் குள்ளக்காபாளையத்தை சேர்ந்த மகேந்திரன் (வயது 48), செல்வராஜ் (61), ரங்கதுரை (48), சதாசிவம் (48), குமார் (43), பரமசிவம் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர். மேலும் கைதானவர்களிடம் இருந்து ரூ.18,300 பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்