வாலிபர் கொலையில் மேலும் 6 பேர் கைது

மத்திகிரி அருகே பழனிபாபா பிறந்த நாள் கூட்ட மோதலில் நடந்த வாலிபர் கொலையில் மேலும் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-11-17 19:30 GMT

மத்திகிரி:-

மத்திகிரி அருகே பழனிபாபா பிறந்த நாள் கூட்ட மோதலில் நடந்த வாலிபர் கொலையில் மேலும் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

வாலிபர் கொலை

ஓசூர் மத்திகிரி கொத்தூரில் பழனிபாபா பிறந்த நாள் பொதுக்கூட்டம் கடந்த 14-ந் தேதி நடந்தது. அப்போது ஓசூர் ராம்நகர் சினு (வயது 19) என்பவர் பங்கேற்றார். அவர் கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. அவரை வெளியே போக சொன்ன நேரத்தில் பிரச்சினை ஏற்பட்டது. அதில் சினு தாக்கப்பட்டார்.

அவர் தனது நண்பர்களான ஓசூர் சாமல்பேட்டை பவன்பிரகாஷ் (19), ராம்நகர் சர்தாஜ் (18) உள்ளிட்டோருடன் பயங்கர ஆயுதங்களுடன் அங்கு மீண்டும் வந்து, தன்னிடம் தகராறு செய்த ஓசூர் சானசந்திரம் வ.உ.சி. நகரை சேர்ந்த மகபூப் பாஷா (30) என்பவரை தாக்கினார். இதில் 2 தரப்பினரும், இரும்பு கம்பி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் தாக்கி கொண்டனர். கத்திக்குத்தும் விழுந்தது.

மேலும் 6 பேர் கைது

அதில் படுகாயமடைந்த சர்தாஜ் பெங்களூரு மருத்துவமனையில் இறந்தார். பவன்பிரகாஷ் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மகபூப் பாஷாவும் படுகாயம் அடைந்தார். அது தொடர்பாக சர்தாஜின் தந்தை பயாஸ் மத்திகிரி போலீசில் புகார் செய்தார்.

அந்த புகாரின் பேரில் ஓசூர் ராம் நகர் மன்சூர் அலிகான் (28), முகமது இம்ரான் (23) ஆகிய 2 பேரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்த நிலையில் இக்கொலை தொடர்பாக ஓசூர் நேதாஜி ரோட்டைச் சேர்ந்த ஆரீப் (22), ஓசூர் ராம்நகர் அகமது பாஷா (22), ராஜகணபதி நகர் அசேன் என்கிற சேட்டு (26), ராம்நகர் முபாரக் (830), பஸ்தி வஉ.சி. நகர் சையத் முகமது (33), ராயக்கோட்டை அட்கோ சையத் அலியாஸ் என்கிற மெக்கானிக் பாஷா (38) ஆகிய 6 பேரை நேற்று கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்