தமிழ்நாட்டில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் இன்று 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-01-18 15:51 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 6 பேருக்கு கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இதில், 5 ஆண்கள் மற்றும் ஒரு பெண் அடங்குவார்கள். சென்னையில் 2 பேருக்கும் ,செங்கல்பட்டில் 3 பேருக்கும் மற்றும் கன்னியாகுமரியில் ஒருவருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதே சமயத்தில் 35 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படவில்லை. இதேபோல தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களை போன்று உயிரிழப்பு எதுவும் இல்லை.

மாநிலத்தில், கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த 8 பேர் இன்று வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி 53 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்