ரூ.6¼ லட்சம் மோசடி

வேலை வாங்கித்தருவதாக ரூ.6¼ லட்சம் மோசடி- பீகார் வாலிபர் கைது

Update: 2022-09-02 21:47 GMT

நெல்லை அருகே உள்ள மானூர் எட்டாங்குளத்தை சேர்ந்தவர் இசக்கிபாண்டி (வயது 21). இவர் முகநூல் பக்கத்தில் விமான சேவை நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக வந்த விளம்பரத்தை நம்பி அதில் உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டார். பின்னர் அந்த நபர் வேலை வாங்கி தருவதாக கூறினார். அவர் கேட்டபடி, வேலை வாங்கி தருவதற்காக இசக்கிபாண்டி ரூ.6 லட்சத்து 25 ஆயிரம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட நபர் வேலை வாங்கி தராமல் தொடர்ந்து ஏமாற்றி வந்ததால், இசக்கிபாண்டி அந்நிறுவனத்திற்கு சென்று விசாரித்தபோது போலியாக அந்நிறுவனத்தின் பெயரில் ஏமாற்றி மோசடி செய்து வந்தது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து இசக்கிபாண்டி நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவுபடி மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜு, இன்ஸ்பெக்டர் ராஜ் ஆகியோர் தலைமையிலான போலீசார் மர்ம நபரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில் அந்த நபர் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜரத்தினம் மற்றும் போலீசார் அங்கு சென்றனர்.

அங்கு பதுங்கி இருந்த பீகார் மாநிலம் சமஷ்டிபூர் காபூர் பகுதியை சேர்ந்த சோட்டுகுமார் (21) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை நெல்லைக்கு அழைத்து வந்து நேற்று கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்