6 கி.மீ. தூரம் நடந்து சென்றுகொட்டக்குடி கிராமத்தில் கலெக்டர் ஆய்வு

போடி அருகே 6 கி.மீ. தூரம் நடந்து சென்று கொட்டக்குடி கிராமத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2023-08-13 18:45 GMT

நடைபயிற்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நடப்போம் நலம் பெறுவோம் என்ற நிகழ்ச்சி போடி அருகே உள்ள குரங்கணி சாலையில் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பின்னர் அவர், குரங்கணி சாலையில் கொம்புதூக்கி அய்யனார் கோவில் சோதனை சாவடியில் இருந்து கொட்டக்குடி கிராமம் வரை 6 கி.மீ. தூரம் நடந்து சென்றார். அப்போது கொட்டக்குடி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையம், உண்டு உறைவிடப் பள்ளி ஆகியவற்றை பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்து மீண்டும் 6 கி.மீ. தூரம் நடந்தே சோதனை சாவடிக்கு வந்தார். நடைபயிற்சியின்போது தேனி மாவட்ட சமூக பாதுகாப்பு அலுவலர் ஷியாமளாதேவி, தேனி மாவட்ட குடும்ப நல துணை இயக்குனர் அன்புச்செழியன், போடி போலீஸ் துணை சூப்பிரண்டு பெரியசாமி, உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு மதுக்குமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகரன், கொட்டக்குடி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் மற்றும் வருவாய்த்துறை, சுகாதார துறையினர், போலீசார் உடன் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்