ரெயிலில் கடத்திய 6 கிலோ கஞ்சா பறிமுதல்
ரெயிலில் கடத்திய 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ஜோலார்பேட்டை
ரெயிலில் கடத்திய 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ஆந்திர மாநிலம் சித்தூர் ரெயில் நிலையத்தில் இருந்து தமிழகம் நோக்கி வரும் ரெயில்களில் கஞ்சா கடத்தலை தடுக்க போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
அப்போது மேற்கு வங்காளம் ஹவுரா ரெயில் நிலையத்தில் இருந்து கர்நாடக மாநில பெங்களூரு வரை செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் காட்பாடியில் இருந்து சோதனை நடத்தினர்.
அப்போது பின்னால் பொது பெட்டியில் கழிவறை அருகே கேட்பாரற்ற கிடந்த பேக்கில் சோதனை செய்யும் போது 3 பண்டலில் 6 கிலோ கஞ்சா இருந்தது. இதனையடுத்து அதனை கைப்பற்றிய போலீசார் அருகே அமர்ந்து இருந்த பயணிகளிடம் விசாரித்தபோது யாரும் உரிமை கோரவில்லை. இதனால் 6 கிலோ கஞ்சாவை ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து வழக்குப்பதிவு செய்தனர். இது சம்பந்தமாக ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.==========