கார் மோதி 6 பேர் படுகாயம்

சாத்தூர் அருகே கார் மோதி 6 போ் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-01-13 18:59 GMT

சாத்தூர்,

சாத்தூர் அருகே உள்ள மேட்டமலையை சேர்ந்த அருண்குமார் (வயது22), சூர்யா (26), கார்த்திக் (26), காளிபாண்டி மகன் கார்த்திக் (35), நந்தக்குமார் (22), செண்பகராஜ் (35) ஆகிய 6 பேர் மேட்டமலை கிராமத்தில் சிவகாசி சாலையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது கோவில்பட்டியை சேர்ந்த மைக்கேல் (30) என்பவர் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து அருண்குமார் உள்பட 6 பேர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அருண்குமார் உள்பட 6 பேரும் படுகாயம் அடைந்தனர். இவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் மைக்கேலை கைது செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்