ஓட்டல்களில் பயன்படுத்திய 6 வீட்டு உபயோக சிலிண்டர்கள் பறிமுதல்

ஓட்டல்களில் பயன்படுத்திய 6 வீட்டு உபயோக சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-11-16 17:58 GMT

வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின்படி, காட்பாடி ெரயில் நிலையத்தில் வேலூர் மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி மற்றும் பறக்கும் படை தனி தாசில்தார் கோட்டீஸ்வரன், காட்பாடி வட்ட வழங்கல் அலுவலர் முரளி மற்றும் காட்பாடி ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஆகியோர் பெங்களூரு செல்லும் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் நேற்று சோதனை நடத்தினர். அதில் 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி திருவலம் சிவில் சப்ளை கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

மதியம் 12 மணி அளவில் காட்பாடி ஆக்சிலியம் கல்லூரி அருகில் மற்றும் சில்க்மில் பஸ் நிறுத்தம் ஆகிய இடங்களில் சோதனை நடத்தியதில் ஓட்டல்களில், வீட்டு உபயோக சிலிண்டர்கள் 6 பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட கியாஸ் சிலிண்டர்கள் சம்பந்தப்பட்ட கியாஸ் கம்பெனியிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்