கம்பம் பகுதியில் வருகிற 6-ந்தேதி மின்சாரம் நிறுத்தம்
கம்பம் பகுதியில் வருகிற 6-ந்தேதி மின்சாரம் நிறுத்தப்படுகிறது
கம்பம் துணை மின் நிலையத்தில் வருகிற 6-ந்தேதி (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. இதனால் கம்பம், கூடலூர், உத்தமபுரம், ஊத்துக்காடு, அண்ணாபுரம், புதுப்பட்டி, காமயகவுண்டன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளுக்கு நாளை மறுநாள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இத்தகவலை சின்னமனூர் மின்பகிர்மான செயற்பொறியாளர் ரமேசுகுமார் தெரிவித்தார்.