5-வது போலீஸ் கமிஷன் ஆலோசனை கூட்டம்

காவல்துறையை மேம்படுத்துவது தொடர்பாக 5-வது போலீஸ் கமிஷன் ஆலோசனை கூட்டம் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கோவையில் நடந்தது.

Update: 2023-09-12 20:30 GMT

கோவை

காவல்துறையை மேம்படுத்துவது தொடர்பாக 5-வது போலீஸ் கமிஷன் ஆலோசனை கூட்டம் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கோவையில் நடந்தது.

ஆலோசனை கூட்டம்

காவல்துறையை மேம்படுத்துவது தொடர்பாக 5-வது போலீஸ் கமிஷன் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி சி.டி.செல்வம் உள்ளார். அவருடைய தலைமையில் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மண்டலத்திலும் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் மேற்கு மண்டல காவல்துறைக்கான ஆலோசனை கூட்டம் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு 5-வது போலீஸ் கமிஷனின் செயலாளரும், கூடுதல் டி.ஜி.பி.யுமான மகேஷ்குமார் அகர்வால் முன்னிலை வகித்தார். முன்னாள் ஐகோர்ட்டு நீதிபதியும், 5-வது போலீஸ் கமிஷனின் தலைவருமான சி.டி.செல்வம் தலைமை தாங்கி கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளிடம் கருத்துகளை கேட்டறிந்தார்.

கருத்து கேட்பு

கூட்டத்தில் கலந்து கொண்ட 8 மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் காவல்துறையை மேம்படுத்தி சீர்ப்படுத்துவது தொடர்பாக பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர். இந்த கூட்டத்தில், காவல்துறைக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது, போலீசாரின் பணிச்சுமைகளை குறைக்க நடவடிக்கை எடுப்பது, மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் இணைந்து செயல்பட்டு கண்காணிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துவது, காவல்துறையில் பணியாற்றி வரும் போலீசாரின் நலன் மற்றும் காவல்துறையில் தேவைப்படும் பல்வேறு அம்சங்கள் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளிடம் கேட்கப்பட்டது.

இதுதவிர இணைய வழி குற்றங்களை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள், பொதுமக்களை மனிதாபிமானத்துடன் அணுகி சேவையை வழங்க நடவடிக்கை எடுப்பது, காவல்துறையில் கூடுதல் பணிநியமனம், ஊதியம், பணிகளுக்கான நெறிமுறை, போலீசாரின் மனஅழுத்தத்தை குறைக்க எடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அறிக்கை

கலெக்டர்கள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்த கருத்துகள் அனைத்தும் அறிக்கையாக தேர்வு செய்து, அதை இந்த கமிஷன் தமிழக அரசிடம் வழங்க உள்ளதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கூட்டத்தில் 5-வது போலீஸ் கமிஷனின் உறுப்பினர்களான ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அலாவுதீன், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ராதாகிருஷ்ணன், கலெக்டர்கள் கிராந்திகுமார் (கோவை), அருணா (நீலகிரி), கிருஸ்துராஜ் (திருப்பூர்), ராஜகோபால் சுன்காரா (ஈரோடு), உமா (நாமக்கல்), கார்மேகம் (சேலம்), சாந்தி (தர்மபுரி), சராயு (கிருஷ்ணகிரி),மேற்கு மண்டல ஐ.ஜி., பவானீஸ்வரி,

போலீஸ் கமிஷனர்கள் பாலகிருஷ்ணன் (கோவை), பிரவின்குமார் அபிநயு (திருப்பூர்), விஜயகுமாரி (சேலம்), டி.ஐ.ஜி.க்கள் சரவணகுமார் (கோவை சரகம்), ராஜேஸ்வரி (சேலம் சரகம்) மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகள் பத்ரி நாராயணன் (கோவை), பிரபாகர் (நீலகிரி), சாமிநாதன் (திருப்பூர்), ஜவகர் (ஈரோடு), ராஜேஸ் கண்ணன் (நாமக்கல்), அருண் கபிலன் (சேலம்), ஸ்டீபன் ஜேசுபாதம் (தர்மபுரி), சரோஜ்குமார் தாக்கூர்(கிருஷ்ணகிரி) மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்