5-ம் வகுப்பு மாணவி தீயில் கருகிய நிலையில் பிணமாக மீட்பு

ஆம்பூர் அருகே 5-ம் வகுப்பு மாணவி தீயில் கருகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டாள்.;

Update: 2023-03-31 16:54 GMT

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வீரனமலை பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். இவருடைய மகள் ஹன்சிகா (வயது 10). ஆம்பூர் அடுத்த வடகரை பகுதியில் உள்ள தனது அத்தை வீட்டில் தங்கி, அதே பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள்.

ஹன்சிகா நேற்று பள்ளிக்கு சென்று விட்டு பின்னர் வீட்டிற்கு வந்தார். இந்த நிலையில் வீட்டில் உள்ள விறகு அடுப்பு அருகே தீயில் கருகிய நிலையில் அவர் பிணமாக கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக உமராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் யுவராணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஹன்சிகா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது மாணவியை தீயிட்டு கொளுத்தினார்களா என்று பல்வேறு கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்