591 மதுபாட்டில்கள் பறிமுதல்
ஸ்ரீவில்லிபுத்தூரில் 591 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்ல பாண்டியன் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது பூவநாதபுரம் விலக்கு பகுதியில் அனுமதியின்றி மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்த சிவகாசியை சேர்ந்த வனராஜ் (வயது26) உள்பட 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 591 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.