ரூ.58½ லட்சத்தில் புதிய கட்டிடங்கள்

ஊட்டி, குன்னூர் ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.58½ லட்சத்தில் புதிய கட்டிடங்களை வனத்துறை அமைச்சர் திறந்து வைத்தார்.

Update: 2022-12-11 18:45 GMT

ஊட்டி, 

குன்னூர் ஊராட்சி ஒன்றியம் உபதலை ஊராட்சி கரிமராஹட்டியில் ரூ.16.07 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம், ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கக்குச்சி ஊராட்சி ஒன்னதலையில் ரூ.42.25 லட்சம் மதிப்பில் பல்நோக்கு சமுதாயக்கூடம் கட்டப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அங்கன்வாடி மையம், பல்நோக்கு சமுதாயக்கூடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார். பின்னர் அமைச்சர் பேசும்போது,

அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு தேவையான உணவு, கல்வி மற்றும் நல்லொழுக்கங்கள் கற்று தரப்படுகின்றன. தாய்மார்கள் தங்களது குழந்தைகளை கட்டாயமாக அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். ஒன்னதலை கிராமத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மக்கள் பங்களிப்பு, அரசின் பங்களிப்புடன் ரூ.42.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய பல்நோக்கு சமுதாய கூடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்து உள்ளது என்றார்.

இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் மாயன் (எ) மாதன் (ஊட்டி), சுனிதா நேரு (குன்னூர்), உபதலை ஊராட்சி தலைவர், கக்குச்சி ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்