அரசுத்துறைகளில் என்ஜினீயர் பணிக்கான ேதர்வை 5,697 பேர் எழுதினர்

சேலத்தில் அரசுத்துறைகளில் என்ஜினீயர் பணிக்கான தேர்வை 15 மையங்களில் 5 ஆயிரத்து 697 பேர் எழுதினர். தாமதமாக வந்தவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-07-02 21:00 GMT

சேலத்தில் அரசுத்துறைகளில் என்ஜினீயர் பணிக்கான தேர்வை 15 மையங்களில் 5 ஆயிரத்து 697 பேர் எழுதினர். தாமதமாக வந்தவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

எழுத்து தேர்வு

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசுத்துறைகளில் காலியாக என்ஜினீயர் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டது. அதற்காக ஒருங்கிணைந்த என்ஜினீயர் பணிக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. சேலம் மாவட்டத்தில் இந்த தேர்வை எழுதுவதற்காக 9 ஆயிரத்து 477 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த தேர்வு சேலத்தில் 15 மையங்களில் நடந்தது.

தேர்வு எழுதுபவர்கள் காலை 9 மணிக்குள் தேர்வு மையத்துக்கு வரவேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தேர்வர்கள் காலை 8 மணி முதல் தேர்வு மையத்துக்கு வரத்தொடங்கினர்.

அனுமதி மறுப்பு

சேலம் கோட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்துக்கு காலை 9.05 மணிக்கு 3 பெண்கள் உள்பட 8 பேர் வந்தனர். தாமதமாக வந்த அவர்களை அதிகாரிகள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள், தேர்வு மையம் முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்ந்து அவர்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து சென்றனர். ஒருங்கிணைந்த என்ஜினீயர் பணிக்கான எழுத்து தேர்வை 5 ஆயிரத்து 697 பேர் எழுதினர். 3 ஆயிரத்து 780 பேர் தேர்வு எழுத வரவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்வையொட்டி ஒவ்வொரு மையத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்