தாம்பரம் விமானப்படை நிலையத்தில் 56 பேர் விமானி பயிற்சியை நிறைவு செய்தனர்

தாம்பரம் விமானப்படை நிலையத்தில் 56 பேர் விமானி பயிற்சியை நிறைவு செய்தனர்.இதற்கான பயிற்சி நிறைவு விழா தாம்பரம் விமானப்படை நிலையத்தில் நேற்று நடந்தது.

Update: 2022-06-05 10:27 GMT

சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள விமானப்படை நிலையத்தில், முப்படைகளில் விமானியாக பணியில் சேருபவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் நமது நட்பு நாடுகளை சேர்ந்த விமானிகளுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது. அந்தவகையில், ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை என நமது நாட்டின் முப்படைகளை சேர்ந்த வீரர்கள், துணை ராணுவ படை வீரர்கள் மற்றும் உகாண்டா விமானப்படை வீரர்கள் என 56 பேர் சமீபத்தில் தகுதிவாய்ந்த விமானியாக பயிற்சியை நிறைவு செய்தனர்.

இதற்கான பயிற்சி நிறைவு விழா தாம்பரம் விமானப்படை நிலையத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு பயிற்சி மையத்தின் மூத்த அதிகாரி ஏர்மார்ஷல் மனவேந்திர சிங் தலைமை தாங்கினார். குரூப் கேப்டன் ரத்தீஷ்குமார் வரவேற்றார். மேலும் தாம்பரம் விமானப்படை நிலையத்தின் சாதனைகளை பற்றியும் அவர் விளக்கி கூறினார்.

பயிற்சியில் பல்வேறு பிரிவுகளில் திறமையாக செயல்பட்டு சிறந்து விளங்கியவர்களுக்கு கோப்பைகள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்