555 போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதினர்

நெல்லையில் 555 போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதினர்.

Update: 2023-08-27 19:02 GMT

நெல்லையில் 555 போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதினர்.

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில், நேரடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு கடந்த 2 நாட்கள் நடந்தது. இதற்காக நெல்லையில் 7 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

நேற்று முன்தினம் பொதுப்பிரிவினர்களுக்கான சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை 5,616 பேர் எழுதினர்.

தொடர்ந்து நேற்று காவல் துறையில் பணியாற்றி 5 ஆண்டுகள் நிறைவு செய்த போலீசாருக்கான சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு நடத்தப்பட்டது.

555 போலீசார் எழுதினர்

இதற்காக நெல்லையில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்வை எழுத 725 போலீசார் விண்ணப்பித்து இருந்தனர்.

ஆனால் 555 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 170 பேர் தேர்வு எழுத வரவில்லை.

தென் மண்டல ஐ.ஜி. நரேந்திரன் நாயர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் ஆகியோர் தேர்வு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்