காரில் கடத்தி வரப்பட்ட 550 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

காரில் கடத்தி வரப்பட்ட 550 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-08-26 19:21 GMT

புதுக்கோட்டை குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை சிறப்பு இன்ஸ்பெக்டர் சந்திரன் மற்றும் தனிப்படை போலீசார் கே.புதுப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். ‌அப்போது, அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனையிட்டனர். இதில் 550 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை கடத்தி வந்த கோட்டைப்பட்டினம் மஞ்சகுடியை சேர்ந்த சரவணனை (வயது 40) பிடித்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் 550 கிலோ ரேஷன் அரிசியை காருடன் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்